
posted 4th January 2025
உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

u_if8o5n0ioo from Pixabay
இதோ மூட்டு வலியைப் போக்கும் 5 இயற்கையான வழிகள்
மூட்டு வலிக்கும், கீல்வாதத்திற்கும் தொடர்புண்டு. இம் மூட்டு வலியானது சில சமயம் கடுமையாக இருப்பதனால் அது அன்றாட வாழ்க்கையினை கணிசமாக அளவில் பாதிக்கின்றது. எனவே, இயற்கை மருத்துவமும், ஆங்கில வைத்தியமும் இணைந்து செயற்பட்டால் இம் மூட்டு வாதங்களின் வாதைகள் குறைந்து நல்ல பலன்களைப் பெறமுடிய வாய்ப்புகள் உண்டு. அதனால், இம்மூட்டு வலியின் வாதைகளிலிருந்து நாம் குணம் பெற ஐந்து இயற்கையான வழிகள் உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.
1. மூட்டுகள் இறுகாமல் தடுக்க தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்
குறைவான தாக்கத்தினை உருவாக்காத பயிற்சிகளான நடைப்பயிற்சி, நீச்சல் அல்லது யோகா என்பனவற்றை ஆரம்பத்தில் ஒரு நாளுக்கு 20 தொடக்கும் 30 நிமிடங்களில் தொடங்கி, படிப்படியாக நேரத்தினைக் கூட்டி 3 தொடக்கும் 5 தரம் வரை செய்ய வேண்டும். இதனால், மூட்டுகள் இறுக்கமாகமல் சாதாரணமாக இலேசாக அசையக்கூடியதாக இருக்க உதவும். இவற்றில் உங்களுக்கு குறிப்பிட்ட தேவைகள் இருக்குமானனால் பிசியோதெரபிஸ்ட்டை அணுகி அறிவுரையினைக் கேளுங்கள்.
2. சூடு, குளிர் சிகிச்சையினைப் பயன்படுத்துங்கள்
மூட்டு வலியுள்ள இடத்தில் மெல்லிய சூட்டினைப் பயன்படுத்தினால் தசைகளுக்கு இரத்த ஓட்டத்தினைக் அதிகரிக்கும். ஆனால், குளிர் பக்கினைப் பயன்படுத்தினால் மூட்டிலிலுள்ள வீக்கத்தினைக் குறைக்கின்றது. இவ்வாறன சாதாரணமான சிகிச்சைகளுக்கு சிறிய துவாயினையோ, சூடான குளியலோ உகந்தவையாக உள்ளன. ஆனால், வீக்கம் இருந்தால், குளிர் பக்கினை (Cold Pack) மெதுவாக வீக்கத்தின் மேல் வைக்கவும். இவ்வாறு செய்கையில் ஒரு சமயம் 15 தொடக்கம் 20 நிமிடங்கள் மட்டுமே பாவிக்க வேண்டும். மேலும், சூடு, குளிர் சிகிச்சையினை மாறி மாறிப் பாவித்து வந்தால் கூடிதலான நிவாரணத்தினைப் பெற முடியும்.
3. அழற்சி எதிர்ப்பு உணவினைப் பயன்படுதப் பழகுங்கள்
சில உணவுகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன, மூட்டுவலி அறிகுறிகளை எளிதாக்குகின்றன. இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன், மக்றல் மீன்களையும், மற்றும் பழங்கள், காய்கறிகள், நட்ஸ்கள், ஓலிவ் எண்ணை போன்றுவற்றினை உணவுடன் சேருங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிவப்பு இறைச்சிகள், சர்க்கரை ஆகியவற்றின் பாவனையினைக் கட்டுப்படுத்தவும். அத்துடன், குர்குமினைக் (curcumin) கொண்டுள்ள மஞ்சள் அவற்றின் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு குறிப்பாக நன்மை பயக்கும்.
4. மனம்-உடல் நுட்பங்களைப் பயிற்சி செய்யுங்கள்
மன அழுத்தம் மூட்டுவலி வலியினை அதிகப்படுத்தும். நினைவாற்றல், தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் தளர்வு, மன அழுத்தம், வலி உணர்வினைக் குறைக்கின்றன. முற்போக்கான தசை தளர்வு அல்லது வழிகாட்டப்பட்ட கற்பனையினுள் உருவான நுட்பங்கள் அசௌகரியத்தில் இருந்து கவனத்தை மாற்ற உதவும். ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் சுவாசத்தினை உணர்ந்து சுவாசிக்கும் அப்பியாசங்கள் செய்வதனால் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெறலாம்.
5. மூலிகை சப்ளிமெண்ட்ஸ் கருத்தில் கொள்ளுங்கள்
மஞ்சள், இஞ்சி மற்றும் போஸ்வெல்லியா போன்ற இயற்கை சப்ளிமெண்ட்ஸ் நிவாரணம் அளிக்கலாம். குர்குமின் உள்ளடக்கத்திற்கு அறியப்பட்ட மஞ்சள், சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது. இஞ்சி விறைப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. அதே சமயம் போஸ்வெல்லியா அல்லது இந்திய தூபம் (Indian frankincense), மூட்டு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. குறிப்பாக, இவ்வாறான இயற்கையான சப்ளிமென்ற்ஸூடன் நீங்கள் உட்கொள்ளும் ஆங்கில மருந்துகள் ஏதாவது பக்க விளைவுகளை உருவாக்குமா என்று முன்னமே உங்கள் மருத்துவரை அணுகி அறிவுரையினை கேட்டுக் கொள்ளுங்கள்.
இந்த இயற்கை வைத்தியங்களினை உங்கள் உணவுகளுடன் சேர்ப்பதன் மூலம் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற்று வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தலாம். மேலும், சில மாதங்களுக்கு மஞ்சள் பொடியைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வாத வலியிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணம் பெற்றதாகக் கூறியுள்ளனர்.
5 Natural Ways to Alleviate Arthritic Pain
Joint pain, often associated with arthritis, can be debilitating and sometimes persistently severe, significantly impacting daily life. Fortunately, natural remedies can work alongside medical treatments to enhance overall well-being.
Here are five effective ways to manage joint pain naturally:
1. Exercise Regularly to prevent stiffness
To begin with low-impact activities that reduce stiffness and improve joint flexibility. They are walking, swimming, or yoga. Exercise strengthens the muscles around joints, relieving pressure and improving overall mobility. Commence these exercises with 20–30 minutes a day and then gradually increase intensity three to five times a week. Consult with a physiotherapist to tailor exercises to your specific needs.
2. Apply Heat and Cold Therapy
Heat relaxes muscles and enhances circulation, while cold reduces inflammation and numbs pain. Use a warm towel, heating pad, or a hot bath to relieve morning stiffness. For swelling or sharp pain, apply a cold compress or ice pack wrapped in a towel for 15–20 minutes at a time. Alternate between hot and cold therapy for comprehensive relief.
3. Adopt an Anti-Inflammatory Diet
Certain foods help reduce inflammation, easing arthritis symptoms. Include fatty fish like salmon and mackerel, rich in omega-3 fatty acids. Add fruits, vegetables, nuts, and seeds to your diet, and use olive oil as a healthy fat source. Limit processed foods, red meats, and sugar to prevent flare-ups. Spices like turmeric, with its active compound curcumin, are particularly beneficial for their anti-inflammatory properties.
4. Practice Mind-Body Techniques
Stress can exacerbate arthritis pain. Mindfulness, meditation, and deep-breathing exercises promote relaxation, reducing stress and pain perception. Techniques like progressive muscle relaxation or guided imagery can help shift focus away from discomfort. Even 10 minutes a day of mindful breathing can have significant benefits.
5. Consider Herbal Supplements
Natural supplements such as turmeric, ginger, and boswellia may provide relief. Turmeric, known for its curcumin content, has potent anti-inflammatory effects. Ginger helps reduce stiffness and swelling, while boswellia, or Indian frankincense, supports joint health. Always consult your doctor before starting supplements to avoid interactions with medications.
By incorporating these natural remedies, many individuals find relief from arthritic pain and improve their quality of life. Some individuals have reported significant relief from rheumatic pain after consistently using turmeric powder for a few months.